கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

410 0

முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக் கோரி முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில், விசாரணை நிறைவடையும் வரை தமது பதவிக்குப் பிறிதொரு உறுப்பினரை நியமிப்பதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவை மனுதாரர் பெற்றிருந்தார்.இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர் மனுதாரரான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா அனுசரணையுடன் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையாகி வாதிட்டார்.


இவ்வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சின்னராசா யோகேஸ்வரனின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே பதவியில் இருந்து விலக்கப்பட்ட யோகேஸ்வரனின் இடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Post

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (31) அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.காரைதீவுவைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர்…

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது.!

Posted by - February 19, 2026 0
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 549 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

Posted by - February 20, 2026 0
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,…

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *