இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

494 0

வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
சு. இராமச்சந்திரன், 15.02.2007 அன்று துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதன் 19ஆவது ஆண்டு நினைவாக, இன்று (21) காலை பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் போது மகஜரும் வாசிக்கப்பட்டது.


அந்த மகஜரில், இராணுவத்தினரும் அக்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் இணைந்து இடம்பெற்ற கைது மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இதுவரை உரிய நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இராமச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னர் சில நாட்கள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், தாம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே சாட்சியாக சகோதரி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2004–2010 காலகட்டத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர் எனவும், தமிழ் ஊடக நிறுவனங்கள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மீதமுள்ள சாட்சிகள் மௌனமாகுமுன், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மகஜரின் பிரதிகள் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு இன்று(20.2.2026) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட…

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Posted by - February 21, 2026 0
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *