தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

442 0

கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும், நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வருடத்தில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் தாவரவியல் ரீதியான ஈர்ப்புகள் மூலம் கிடைத்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்து, 1.394 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருமானமானது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% உயர்வு எனவும், 2025ஆம் ஆண்டில் சுற்றுலா ஈட்டல்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பூங்காக்களின் பங்களிப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் கீழ் பேராதனை அரச தாவரவியல் பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, கம்பஹா தாவரவியல் பூங்கா, சீதாவக்க ஈர வலய தாவரவியல் பூங்கா, மிரிஜ்ஜவில வறண்ட வலய தாவரவியல் பூங்கா மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டம் ஆகியவை நிர்வகிக்கப்படுகின்றன.

இதில், பேராதனை அரச தாவரவியல் பூங்காவிற்கு மாத்திரம் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதோடு, ஒட்டுமொத்தமாக அனைத்துத் தாவரவியல் பூங்காக்களையும் பார்வையிட 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகத் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம், தாவர விற்பனை மற்றும் ஏனைய வசதிகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் மற்றும் இதர வருமானங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இந்த ஒட்டுமொத்த வருமான உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Post

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு.!

Posted by - February 19, 2026 0
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எங்களுடைய நாட்டிலே வடக்கு…

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

Posted by - February 19, 2026 0
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்…

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *