தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

405 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்பரப்பை மீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கடல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு நடைபெற்ற மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர், அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை பரிசீலித்த மன்னார் நீதவான், குறித்த 10 மீனவர்களையும் மார்ச் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Post

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

Posted by - February 20, 2026 0
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009…

புதுடில்லியில் அநுர – இம்மானுவேல் சந்திப்பு!

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று பிற்பகலில் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டின் பின்னணி சந்திப்பில்…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026 0
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின்…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Posted by - February 21, 2026 0
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல்…

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *