சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

167 0

மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.
“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகம் அரசடி பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்நிகழ்வு பேராசிரியர் சி. ஜெய்சங்கர் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மத்திய நிலைய பணிப்பாளர் டாக்டர் அருளானந்தம் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பி. பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


மூத்தோரின் நினைவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உருவான பாரம்பரிய, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் வேடுவ சமூகம், இஸ்லாமிய சமூகம், இந்து சமூகம், பறங்கி சமூகம் மற்றும் சிங்கள சமூகம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பண்டைய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.பெருமளவான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

Related Post

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை.!

Posted by - February 20, 2026 0
முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச,…

இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

Posted by - February 21, 2026 0
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக…

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்…

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *