மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் அமெரிக்கா பிரச்சினைகளை உருவாக்குகிறது எனக் கருத்து.!

317 0

சமீபத்திய ஆய்வில், கனடாவில் பெரும்பான்மையானோர் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல என்றும், ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருதுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆய்வமைப்புகள் இணைந்து, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி பொதுமக்களிடம் ஆய்வு நடத்தி முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளன.

அதில் 58 சதவிகித கனேடியர்கள் அமெரிக்காவை கனடாவின் கூட்டாளர் அல்ல எனக் கூறியுள்ளனர்.அதே கருத்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க மக்களிடையிலும் காணப்படுகின்றது. மேலும், 57 சதவிகித பேர் ஆபத்து மற்றும் சவால்கள் எழும் நேரத்தில் அமெரிக்காவை நம்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான கனேடியர்கள், அமெரிக்கா மற்ற நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதைவிட, பிரச்சினைகளை உருவாக்குவதாக கருதுகிறார்கள்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும், அமெரிக்கா குறித்த கனேடியர்களின் எண்ணத்தை பெரிதும் பாதித்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Related Post

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Posted by - February 19, 2026 0
நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில்…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஜேர்மன் படைகள் எர்பில் நகரிலிருந்து தற்காலிக விலகல்.!

Posted by - February 20, 2026 0
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிப்பதால், ஜேர்மனி தனது படைகளின் அளவைக் குறைக்கும் முடிவெடுத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம்…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

Posted by - February 20, 2026 0
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து…

கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

Posted by - February 16, 2026 0
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *