கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

324 0

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர், முள்ளிவாய்க்காலில் நடந்த இன ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியை பெறுவதற்கான போராட்டம் இன்றுடன் 3287 நாட்களாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல தாய்மார்கள், உறவுகள் இறந்து விட்டனர்; மீதமுள்ளவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான சரியான தகவல்களை அறிய முன்னெடுக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.


போராட்டத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியை கடந்து மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடைந்தது. தங்களின் கோரிக்கைகள்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குசர்வதேச நீதி வழங்குதல், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை, பயங்கரவாதம் தடுக்கும் சட்டங்கள்[P.T.A மற்றும் PSTA] நீக்கம், வட கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படல், மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் தலையீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் நிறுத்தம், பெளத்த மயமாக்கல் நிறுத்தம், மற்றும் அனைத்து வகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் ஆகியவை ஆகும்.போருக்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்தும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் நீதி பெற முடியாமல் இருப்பதை நினைவூட்டி, சர்வதேச சமூகத்திடம் இச்சம்பவத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

Related Post

மருத்துவத்துறையில் எட்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் .!

Posted by - February 19, 2026 0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட…

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Posted by - February 19, 2026 0
முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக்…

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 16, 2026 0
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16)…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Posted by - February 24, 2026 0
கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து…

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடலம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை.!

Posted by - February 19, 2026 0
மாத்தளை காவல் பிரிவின் கலல்பிட்டி பகுதியில் உள்ள பரகெடி ஓயா எறும்புப் புற்றுக்கு மேலே உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு சிதைந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *