நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

438 0

நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்

எனினும் எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என, இன்று (19) பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் நிலவுகிறது .விநியோகம் குறைவாக இருப்பதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நுவாரெலியாவில் பிரதான இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள் இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் அறவே விநியோகிக்கப்படாமல், முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related Post

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை: காணிகள் விடுவிப்பதில் இழுபறி.!

Posted by - February 20, 2026 0
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர…

அக்குரேகொட படுகொ*லை விவகாரம் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து…

சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

Posted by - February 20, 2026 0
தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன்…

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *