இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பு.!

394 0

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில்’ (AI Impact 2026) பங்கேற்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். இந்த உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாகவே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

குறிப்பாக, அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட பொருளாதார உடன்படிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் குறித்து இதன்போது முக்கிய தீர்மானங்கள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமருடனான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை; தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்.!

Posted by - February 20, 2026 0
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்து வருவதன் காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் முறிந்துள்ளதுடன்…

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

Posted by - February 19, 2026 0
மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *