இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டு

391 0

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடலில் பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் விகாராதிபதி கலந்து கொண்டபோதும், காணிகளை இழந்த மக்கள் அழைக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்த மதத்திற்கும் தொடர்பில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டது இலங்கை இராணுவம் என்பதையே சுட்டிக்காட்டினார். அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா இந்த விகாரை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.


“இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் மற்றொரு கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை. எனவே, அரசு இந்த விவகாரத்தில் நீதியான முறையில் தலையிட்டு, காணி உரிமைகளை மக்களுக்கே மீள வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இவ்வாறான செயல்களுக்கு துணைபோகக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Post

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

Posted by - February 21, 2026 0
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக…

எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *