தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

378 0

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை மீள எமக்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

எமது காணிகள் எமக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். இருந்தபோதிலும், எமது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாமல் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


எம்மை அழைக்காமல், எமது காணிகளை ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டப்படும் விகாராதிபதியை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது, அந்த ஆக்கிரமிப்புக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது,” என தெரிவித்தனர்.

மேலும், இவ்விடயத்தில் சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, காணி உரிமை தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் சமமாகக் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Post

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

Posted by - February 21, 2026 0
பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன்…

இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

Posted by - February 16, 2026 0
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17)  இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி…

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *