அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

182 0

இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்தியா–ஐரோப்பா வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு டெல்லி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் அறிமுகமான IMEC வழித்தடம், கடல், ரயில், டிஜிட்டல் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து திட்டமாகும். தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்குதல் மற்றும் துறைமுகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

ஒப்பந்தத்தின் படி, முந்த்ரா துறைமுகம் மற்றும் ஹசிராதுறைமுகம் இந்தியா–மேற்கு ஆசியா இணைப்புக்கான கிழக்கு நுழைவாயில்களாக அமையும்; மார்சேய் ஃபோஸ் துறைமுகம் ஐரோப்பாவிற்கான மேற்கு நுழைவாயிலாகச் செயல்படும். சுமார் 70 மில்லியன் டன் கூடுதல் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த இணைப்பு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Related Post

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை- மெக்சிகோவில் கலவரம்.!

Posted by - February 23, 2026 0
மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில்…

ரஷ்யா – உக்ரைன் மோதல் மீண்டும் தீவிரம்.!

Posted by - February 23, 2026 0
பெப்ரவரி 22, 2026 அன்று, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய இரவு தாக்குதலை நடத்தியது . இதில் 50 ஏவுகணைகள் மற்றும் 297 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.உக்ரைன் விமானப்படை…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

Posted by - February 16, 2026 0
காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *