தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

439 0

இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தென் கொரிய நீதிமன்றம் இன்று (19) அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பித்தது.

2024 டிசம்பரில் யூன் சுக் இயோல் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது தேசிய சட்டமன்றத்தை முடக்கும் நோக்கம் கொண்டது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

வழக்கு விசாரணையில் மரண தண்டனை விதிக்குமாறு சட்டத்தரணிகள் மனுவில் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் 65 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எனினும், யூன் சுக் இயோல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இராணுவச் சட்டத்தை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைத் தடுப்பது குறித்து எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக அவரது நடவடிக்கை இருப்பதாகவும் வாதிட்டார்.

தென் கொரிய சட்டத்தின் கீழ் ஒரு கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்துவதுவதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.தென் கொரியா இறுதியாக 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனையை வழங்கியது, ஆனால் 1997 முதல் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த…

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை- மெக்சிகோவில் கலவரம்.!

Posted by - February 23, 2026 0
மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில்…

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

Posted by - February 19, 2026 0
ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத்…

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

Posted by - February 20, 2026 0
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான…

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026 0
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *