கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

144 0

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

உடலை முறைப்படி அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், காணாமல் போன 33 வயதான ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) என்பவரின் குடும்பத்தாருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை, இந்த மரணம் “விளக்க முடியாதது” (unexplained) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கேட்ரின் (Catrine) பகுதியில் கடைசியாகக் காணப்பட்டார்.

ஆறு நாட்களுக்குப் பின்னர் , கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி அன்று அவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் காணாமல் போனது முதல், காவல்துறை அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், வீடு வீடாகச் சென்றும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தத் தேடுதல் பணியில் காவல்துறை ஹெலிகாப்டர், ட்ரோன்கள் (Drones), மீட்புக் குழுக்கள்,
குவாட் பைக்குகளில் (Quad bikes) சென்ற அதிகாரிகள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்.

Related Post

தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு.!

Posted by - February 20, 2026 0
தஜிகிஸ்தான், பாகிஸ்தான், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தஜிகிஸ்தானில் நேற்று இரவு 11.24 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026 0
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு…

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Posted by - February 19, 2026 0
உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த ஜோடி…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *