மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு.!

432 0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (31) அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
காரைதீவுவைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக கடமையாற்றி வந்தார். சுகயீனம் காரணமாக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (20) அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு பல்கலைக்கழகம் மருத்துவ பீடத்தில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை (MBBS) நிறைவு செய்த அவர், பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பணியாற்றி, அதன் பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்தார்.அம்பாறை காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு, மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்த திறமையான இளம் மருத்துவரின் திடீர் மறைவு பிரதேச மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Related Post

ஆசன விவகாரம் : அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா? – ஜெசீதன் கேள்வி.!

Posted by - February 21, 2026 0
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.நேற்றைய பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு…

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடலம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை.!

Posted by - February 19, 2026 0
மாத்தளை காவல் பிரிவின் கலல்பிட்டி பகுதியில் உள்ள பரகெடி ஓயா எறும்புப் புற்றுக்கு மேலே உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு சிதைந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்.!

Posted by - February 19, 2026 0
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்…

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *