ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

395 0

ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான ஒப்பந்தத்தை முடக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.


சர்வதேசச் சட்டம் மீறப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, டியாகோ கார்சியா தீவு அல்லது குளோசெஸ்டர்ஷையர் மாகாணத்தில் அமைந்துள்ள அரச வான்படைத் தளத்திலிருந்து எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்மரின் இந்த முடிவு, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.முன்னதாக, ஈரான் கடற்பரப்பிற்கு அருகில் பெரும் போர்க்கப்பலை நிலைநிறுத்திய ட்ரம்ப், அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமைதி ஒப்பந்தத்தை பத்து நாட்களுக்குள் எட்ட வேண்டும் என ஈரான் அரசை எச்சரித்திருந்தார்.

இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை இரவு சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை வெளியிட்ட ட்ரம்ப், முக்கியமான இந்தத் தீவின் கட்டுப்பாட்டை இழப்பது பெரிய தவறாகும் என பிரித்தானிய அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், டியாகோ கார்சியா உள்ளிட்ட தளங்களிலிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், பிரித்தானியா உட்பட பல நாடுகளை பாதுகாப்பதற்காகவே என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

Related Post

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - February 19, 2026 0
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை…

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர்…

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

Posted by - February 20, 2026 0
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கை யாளர்களுக்கு வேலை வாய்ப்பு- புதிய திட்டம் அறிவிப்பு.!

Posted by - February 23, 2026 0
ஜேர்மனி அரசு, நாட்டில் புகலிடம் கோரும் புலம்பெயர் மக்கள் விரைவில் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், புலம்பெயர் மக்கள் ஜேர்மனிக்கு…

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

Posted by - February 19, 2026 0
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *