இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

363 0

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் F.U. வுட்லர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் வாகன ஓட்டும்போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 5 வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

, மேலும் 7 கடுமையான விபத்துகள் மற்றும் 78 சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானனர் என அவர் குறிப்பிட்டார்.விசாரணைகளில், வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவரும் மோட்டார் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்டினர் மீது வழக்கு தொடரப்படும்.

மேலும், ஒரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் வாடகைக்கு விட வேண்டும் என்றால், வெளிநாட்டு நபர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்வாசிக்கு வழங்கப்படும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம், அல்லது மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.


இந்த மாற்றுச் சான்றிதழ் வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கருமபீடங்களிலும் வழங்கப்படும் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்தார்.

Related Post

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

Posted by - February 16, 2026 0
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17)  இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026 0
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின்…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *