துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

369 0

துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் போம்புவல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் நிறத்தை மாற்றித் தன்வசம் வைத்திருந்தமை, துப்பாக்கியைக் கடத்தியமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து குறித்த உந்துருளியில் இருந்து அகற்றப்பட்ட பாகங்கள், நிறத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் மற்றும் போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Posted by - February 24, 2026 0
கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Posted by - February 21, 2026 0
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை…

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 16, 2026 0
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர். இதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *