அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி இலங்கையில்: பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து உயர்மட்டச் சந்திப்பு.!

465 0

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி, நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்து கலந்துரையாடினார்.


இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளைப் பிரதி அமைச்சர் பாராட்டினார். அமெரிக்க விமானப்படையின் 36-வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் மூலம் இரண்டுC-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களும் விமானப்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து உதவிகள், இலங்கையின் மீட்புப் பணிகளில் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்தார்.


மேலும், இத்தகைய அவசரநிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். இதன் அடிப்படையில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்புகப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், ‘பிளீட் பிராட்பேண்ட்’ (FleetBroadband) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.


இதற்கு பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.இறுதியாக, இந்தோ–பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் போது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிகவும் முக்கியமானது என்ற கருத்தில் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.


நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற அட்மிரல் கோஹ்லர், 2024 ஏப்ரல் 4ஆம் திகதி அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவர் தலைமைத்துவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

தனியார் சுற்றுலா பேருந்து – இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்.!

Posted by - February 20, 2026 0
இலங்கை காவல் துறை தெரிவித்ததன்படி, யட்டியாந்தோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட தணகொலவத்த பகுதியில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (20) மாலை…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

வட்டவளையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பாரவூர்தி – இருவர் படுகாயம்.!

Posted by - February 21, 2026 0
வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *