குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

174 0

கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.
மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான நபர், தனது மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


நேற்று மாலை உயிரிழந்த நபருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த மாமனார் மருமகனை கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த நபர் உடனடியாக தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான மாமனார் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

இந்தியா – இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

Posted by - February 19, 2026 0
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.…

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Posted by - February 16, 2026 0
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக…

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *