யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை: காணிகள் விடுவிப்பதில் இழுபறி.!

385 0

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இதற்கான தீர்வை காண முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கலந்துரையாடலில் பௌத்த சாசன அமைச்சக அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி கலந்து கொண்டனர்; இருப்பினும், மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும் நயினாதீவு மற்றும் ஆரியகுளம் விகாராதிபதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அழைக்கப்படவில்லை.


காணிகளுக்கான உரிய ஆவணங்கள் பொதுமக்களால் முறையாக வழங்கப்பட்டிருந்த போதிலும், திஸ்ஸ விகாராதிபதியால் எந்த முறையான ஆவணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எதுவும்எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டக் கலந்துரையாடல் விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.…

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை.!

Posted by - February 20, 2026 0
முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *