இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

435 0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அந்த அடிப்படையில் ஜனாதிபதியின் தற்போதைய இந்திய விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயபூர்வமான பேச்சுவார்த்தைகளுடன் மட்டுப்படக் கூடாது.

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. தற்போது நீண்டகாலமாக செயலிழந்த நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, நாட்டில் ஜனநாயக ஆட்சியமைப்பை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கே உண்டு.


எனவே, இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளைத் தாண்டி, உள்நாட்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

Related Post

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய…

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ்…

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

Posted by - February 21, 2026 0
வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என…

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *