போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

357 0

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் சென்றபோது கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் பாலத்துறை பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, பதுங்கியிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை மாத்திரை தொகுதியுடன் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மாத்திரைகளை மொத்தமாகப் பல்வேறு நபர்களுக்கு விநியோகித்து வந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் என்பதோடு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

Posted by - February 21, 2026 0
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக…

குடும்பத் தகராறு கொலையில் முடிவு: மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி.!

Posted by - February 21, 2026 0
கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியுள்ளது.மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய, ஒரு பிள்ளையின்…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

Posted by - February 20, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தியாவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *