இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

222 0

குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த 31 வயதுடைய கணவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்போது ஆத்திரமடைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.பாரிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி இலங்கையில்: பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து உயர்மட்டச் சந்திப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி, நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வழக்கில் நீதி கோரி வடமராட்சியில் ஆர்ப்பாட்டம்.!

Posted by - February 21, 2026 0
பருத்தித்துறை பகுதியில் இன்று (21.02.2026) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்தது.2007.02.15 அன்று யாழ்ப்பாணம் கலிகைச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *