தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

389 0

ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு செயற்படும் மர்ம நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் முன்வைத்த புகார்களைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

சிலர் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கழிவுகள் மற்றும் மலக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி தளவாய் பகுதிகளில் வீசிவிட்டு செல்வதாக கூறினார். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், இந்து ஆலயங்களின் புனிதத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறான செயற்பாடுகளை ஏற்க முடியாதது என்றும், அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் ஊடாக ஏறாவூர் நகர சபைக்கு தகவல் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.மேலும், அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும். கோழிப் பண்ணை தொடர்பிலும், வீதி விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் கழிவுகள் வீசப்படுவதாகவும், கழிவு அகற்றும் வாகனங்கள் முறையாக வராததால் கழிவுகள் தேங்கி கிடப்பதாகவும் தளவாய் மீனவர் சங்கமும் ஆலய நிர்வாகத்தினரும் கவனம் ஈர்த்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், குற்றவாளிகளை அடையாளம் காண பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபைமூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Post

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Posted by - February 16, 2026 0
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு…

இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

Posted by - February 16, 2026 0
ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17)  இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி…

இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டு

Posted by - February 20, 2026 0
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை…

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - February 16, 2026 0
2026 பெப்ரவரி 18 முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு போதுமான பதிலை வழங்கத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *