இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

414 0

இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா. வேதநாயகன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சத்யஞ்சல் பாண்டே (இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர்) மற்றும் சாய்முரளி (யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல்) ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், இந்திய நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி, காரைநகர் படகுத் தள அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடருக்குப் பின்னான உதவித் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் “அயலவருக்கு முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் விளக்கமளித்தார். சில கடனுதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.டித்வா பேரிடரின்போது இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்ததுடன், தொடர்ச்சியான பங்களிப்புகளையும் பாராட்டினார்.

இந்திய நன்கொடையின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பான தகவல்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பலாலி விமான நிலைய முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசு விசேட கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கால விரிவாக்க நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுக்

கு சாதகமான பதிலை வழங்கத் தயார் என பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக, கொள்கை நிலைப்பாடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் இந்திய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Related Post

புதுடில்லியில் அநுர – இம்மானுவேல் சந்திப்பு!

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று பிற்பகலில் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டின் பின்னணி சந்திப்பில்…

கஞ்சாவுடன் குடும்பப் பெண் கைது.!

Posted by - February 20, 2026 0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது…

மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

Posted by - February 21, 2026 0
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு…

வட்டவளையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பாரவூர்தி – இருவர் படுகாயம்.!

Posted by - February 21, 2026 0
வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான…

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு.!

Posted by - February 19, 2026 0
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எங்களுடைய நாட்டிலே வடக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *