பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

379 0

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணையில் விடுவித்தது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் கூறியது:


“தற்போதைய அரசில் எவ்வித திட்டமிடலும் இல்லை. அனுபவமிக்க அரச அதிகாரிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் அரசு சீர்குலைத்துள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது.

எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.


பழைய சம்பவங்களை கிளறிப் பார்ப்பதை விட, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பழிவாங்கும் அரசியலால் நாட்டை முன்னேற்ற முடியாது,” என அனுஷ பல்பிட்ட வலியுறுத்தினார்.

Related Post

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

Posted by - February 20, 2026 0
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009…

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

Posted by - February 21, 2026 0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு…

போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்…

கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *