மீண்டும் ஒரு இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

406 0

இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு முறையான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,“நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 13.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைசெய்துள்ளது. இவ்வாறான கட்டண உயர்வு அடிமட்ட மக்கள்மீதே கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. அத்தகைய இருண்ட காலம் மீண்டும் உருவாக அரசு இடமளிக்கக் கூடாது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் தவறுகளால் ஏற்படும் இந்நட்டத்தை ஏழை மக்களின் மீது சுமத்துவது நியாயமற்றதாகும். எனவே, நிலக்கரி இறக்குமதியில் வெளிப்படையானமற்றும் பொறுப்புணர்வுள்ள நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.


தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த முடியாத நிலை காரணமாக விற்பனை செய்ய இயலாமல் திணறுகின்றனர்.

ஆகையால், பிரதேச ரீதியாக நெல் உலர்த்தும் இயந்திரங்களை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தமது சொத்துக்களை அடகு வைத்தும் விற்றும் விவசாயத்தில் ஈடுபடும் இவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு, நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கான மின்சாரத்தை மானிய அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் முன்வர வேண்டும்,” என வலியுறுத்தினார்.

Related Post

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே – சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும்…

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

Posted by - February 19, 2026 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ்…

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி

Posted by - February 16, 2026 0
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை…

காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

Posted by - February 21, 2026 0
அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *