காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

394 0

அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரு குடும்பங்களும் உறவிற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையிலும், இன்று ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து யுவதி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.


சம்பவத்தையடுத்து, குறித்த இளைஞர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Related Post

சிவனடிபாத மலையில் உள்ள வனப் பகுதியில் திடீர் தீப்பரவல்.!

Posted by - February 19, 2026 0
இன்று சிவனடிபாத மலை உச்சிக்கு முன்னால் அமைந்துள்ள வனப் பகுதியில் இன்று (19) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நிலவும் கடும் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

Posted by - February 20, 2026 0
கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்…

வடக்கு மாகாணத்தில் ‘நிழல் அமைச்சர்கள்’ நியமனம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.!

Posted by - February 20, 2026 0
வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று…

ஜோன்ஸ்டனுக்கும் , புதல்வர்களுக்கும் மார்ச் 6 வரை விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - February 21, 2026 0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *