மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

295 0

மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இந்தச் சவாலை விடுத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு மாகாண சபைத் தேர்தலே தகுந்த களமாகும். எனவே, இந்தத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம்.

தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் பாரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.” – என்றார்.

எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி நீண்டகாலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயங்குகின்றது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

Posted by - February 19, 2026 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ்…

சர்வதேச தாய்மொழி தினம்: மட்டக்களப்பில் அனைத்தின மக்களின் உணவு கண்காட்சி.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்புவில் இன்று (21) சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சி நடைபெற்றது.“உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல்” என்ற…

மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!

Posted by - February 16, 2026 0
சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார…

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 16, 2026 0
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16)…

விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *