பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

226 0

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் இரவு நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (Below freezing) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை ஞாயிறு இரவு 20:00 மணி முதல் திங்கள் காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ஆர்க்டிக் பகுதிகளில் இருந்து வீசிய குளிர்ந்த காற்று நாடு முழுவதும் பரவியதால், பனிப்பொழிவு மற்றும் உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மழை பெய்து வருவதால், சாலைகளில் ‘பிளாக் ஐஸ்’ எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வழுக்கும் பனிப் படலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து முழுவதும் சுற்றுச்சூழல் முகாமையால் (Environment Agency) 74 வெள்ள எச்சரிக்கைகளும், 195 வெள்ள விழிப்புணர்வுகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இவை பெரும்பாலும் தெற்கு மற்றும் மத்திய (Midlands) பகுதிகளில் நிலவுகின்றன.

இதேவேளை, சென்ட்ரல் (Central), டேஸைட் மற்றும் ஃபைஃப் (Tayside & Fife), கிராம்பியன் (Grampian), ஹைலேண்ட்ஸ் (Highlands) தென்மேற்கு ஸ்காட்லாந்து (South West Scotland) ஸ்ட்ராத்க்லைட் (Strathclyde)
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட் (Northumberland) போன்ற பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப் பணி மேலாளர் ஜொனாதன் டே கூறுகையில், சுமார் 24,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் இருப்பினும் ஏறத்தாழ 330 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வேல்ஸிலும் (Wales) மூன்று பகுதிகளில் வெள்ள விழிப்புணர்வு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

தாலிபான் புதிய சட்டம்: பெண்கள் கடும் அதிர்ச்சி.!

Posted by - February 20, 2026 0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் கொண்டு வந்த புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி கணவர்கள் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும்…

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

Posted by - February 19, 2026 0
சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தற்காலிக வரி அதிகரிப்பு!

Posted by - February 23, 2026 0
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.இதற்கமைய, குறித்த வரியின்…

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *