வட்டவளையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பாரவூர்தி – இருவர் படுகாயம்.!

237 0

வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் முதலில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இவ்விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் சந்தன கமகே மஹாகா தெரிவித்தார்.எதிர் திசையில் வந்த மற்றொரு லொறியுடன் நேருக்கு நேர் மோதல் ஏற்படவிருந்ததைத் தவிர்க்க முயன்றபோது, முதற்கண் லொறி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்த ஒரு பயணி, விபத்தைப் பார்க்க இறங்கிச் செல்ல முயன்றபோது தவறி விழுந்து பேருந்தின் முன்சக்கரத்தின் கீழ் கால் சிக்கியதால் பலத்த காயமடைந்துள்ளார்.

அவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இரு சம்பவங்கள் தொடர்பாக வட்டவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related Post

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு.!

Posted by - February 19, 2026 0
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எங்களுடைய நாட்டிலே வடக்கு…

தங்க விலையில் மாற்றமில்லை: நகையக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.!

Posted by - February 20, 2026 0
உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24…

கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

Posted by - February 26, 2026 0
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட…

தளவாய் பகுதியில் கழிவுகள் கொட்டும் மர்ம நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிலாந்தன் அறிவிப்பு.!

Posted by - February 21, 2026 0
ஏறாவூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கழிவு மூட்டைகள், தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்கள், பிரதான வீதிகள் மற்றும் மக்கள் வாழும் இடங்களில் வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *