எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

492 0

வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து கொண்டு தங்களுக்கு நியாயம் கோருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.மன்னார் அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி கரையோரம் வரை வந்து தொழிலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டினார்.


அண்மையில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 6 படகுகள் மற்றும் 47 பேர் (25 பேர் ஒரு குழுவாகவும், 22 பேர் ஒரு குழுவாகவும்) கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை மீறி வருவதாகவும், அவ்வப்போது சில படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது போதுமான நடவடிக்கையல்லஎன்றும் தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லை ஒரு இறையாண்மை கொண்ட பகுதி என்பதால், அதை மீறி நுழையும் போது கைது தவிர்க்க முடியாதது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், எல்லை மீறி வருவது மட்டுமல்லாமல், கடல் வளங்களை சுரண்டுதல், உபகரணங்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.கைது செய்யப்பட்ட பின்னரும், மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்தார்.

குற்றச் செயலை செய்து விட்டு அதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் இந்த விடயத்தில் தலையிட்டு எல்லை மீறலைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.


மேலும், இந்திய மீனவர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Post

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் சத்தியலிங்கம் எம்.பி தெரிவிப்பு.!

Posted by - February 19, 2026 0
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எங்களுடைய நாட்டிலே வடக்கு…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!

Posted by - February 20, 2026 0
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்!

Posted by - February 16, 2026 0
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *