மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித தலைமையில் விசேட குழு நியமனம்.!

161 0

நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வரும் மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற அமர்வில், குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.


அந்த தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஷ்மன் நிபுனராச்சி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இரா. சாணக்கியன், சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி, நிஷாம் காரியப்பர் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் நிலவும் அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இத்தெரிவுக்குழுவின் பிரதான நோக்கமாகும். குறித்த குழு தனது அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ்…

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

Posted by - February 20, 2026 0
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த…

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
கொழும்பு துறைமுக வளாகத்தில் நேற்று பிற்பகல் பாரந்தூக்கி இயந்திரமொன்று உந்துருளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *