நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

333 0

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Post

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து அறிவிப்பு

Posted by - February 16, 2026 0
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

Posted by - February 19, 2026 0
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும்…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார் – மொட்டுக் கட்சி சூளுரை.!

Posted by - February 20, 2026 0
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *