கட்டுப்பாட்டை இழந்த கார் ஏற்படுத்திய விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு.!

258 0

குருநாகல் – நாரம்மல வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாரம்மல நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் பலத்தினால் மின்கம்பம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.

அதேநேரம், குருநாகல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உந்துருளியைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாகக் காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு.!

Posted by - February 19, 2026 0
மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில்…

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு:பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

Posted by - February 19, 2026 0
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைப் பற்றிய கல்வியை ஊக்குவிப்பது நோக்கமாக, விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதன்பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி…

இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டு

Posted by - February 20, 2026 0
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை…

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை: காணிகள் விடுவிப்பதில் இழுபறி.!

Posted by - February 20, 2026 0
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடங்கியபோதும், காணிகளை விடுவிப்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது. ஜனாதிபதி அநுர…

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித தலைமையில் விசேட குழு நியமனம்.!

Posted by - February 20, 2026 0
நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வரும் மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *