உபாதையால் நீக்கப்பட்ட மதீஷவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு.!

365 0

டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் மூன்றாவது மாற்றமாக, உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான குழுநிலைப் போட்டியின்போதே பதிரணவின் கெண்டைக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் உடல் தகுதி பெற பல வாரங்கள் தேவை என்பதால், அவர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


25 வயதான மதுஷங்க இதுவரை இலங்கை சார்பில் 15 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அண்மைக் காலத்தில் உபாதை காரணமாக அவர் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற முடியவில்லை.

முன்பே, டி20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னரே வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கும் உபாதையால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்; அவருக்கு பதிலாக பிரமோத் மதுஷான் இணைக்கப்பட்டார். தொடர்ந்தும், காயத்துக்கு உள்ளானவனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

Related Post

டி20 உலகக் கிண்ணம்: சூப்பர் 8 சுற்று – அணிகள், போட்டி விபரம்.!

Posted by - February 19, 2026 0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் அபார வெற்றி அவர்களை சூப்பர் 8 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கொழும்பில் நடைபெறும் சூப்பர் 8…

ரி20 உலகக் கிண்ணம் – நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

Posted by - February 19, 2026 0
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

Posted by - February 20, 2026 0
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B…

இலங்கை அணியின் தோல்வியை கடுமையாக விமர்சித்த சங்கக்கார.!

Posted by - February 23, 2026 0
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (22) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை தேசிய…

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

Posted by - February 15, 2026 0
உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *