அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

220 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அவர், இதற்காக 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த பத்து நாட்களில் இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகும் என்றும், வழங்கப்பட்ட காலம் போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் தரப்பும் கடுமையான பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் குறிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஈரான்கடிதம் அனுப்பி, தாம் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கமாட்டோம் எனவும், ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் தற்காப்பு உரிமையின் அடிப்படையில் பதிலடி வழங்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை!

Posted by - February 23, 2026 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

Posted by - February 19, 2026 0
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர்…

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

Posted by - February 20, 2026 0
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்…

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Posted by - February 23, 2026 0
மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *