நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

247 0

தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர் போர் நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நைஜீரியப் படையினரே அனைத்து பாதுகாப்பு முடிவுகளிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் தினத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா இராணுவத்தினரை அனுப்பி வைப்பதை முதன் முதலாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதேவேளை, நைஜீரிய பாதுகாப்புத் தலைமையகத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமைலா உபா, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அபுஜா அமெரிக்க படையினரின் உதவியைக் கோரியதாக ரொய்ட்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையினர் எப்போது வருவர் என்பதைக் கூற மறுத்துள்ள அவர் அமெரிக்க- நைஜீரியா கூட்டுப் பணிக்குழுவின் கீழ் நடந்து வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Post

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!

Posted by - February 20, 2026 0
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான Paris நகரில் இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பரிசின் வடக்குப் பகுதியான 10ஆம் வட்டாரத்தில், பார்பேஸ்–ரோஷ்சுவார் நிலையம்…

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Posted by - February 16, 2026 0
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளில் நிலவும் கடும் உறைபனி காரணமாக மெட் ஆபீஸ் (Met Office) புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

கிறிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

Posted by - February 16, 2026 0
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தணிப்பதற்கு ட்ரம்ப் வலியுறுத்தல்.!

Posted by - February 20, 2026 0
2025 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற…

வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட டிரம்ப் உத்தரவு.!

Posted by - February 20, 2026 0
வேற்றுகிரகவாசிகள் தொடர்பான அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ”ஏரியா-51”ல் வேற்றுகிரகவாசியை வைத்து ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *