இந்தியா – இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

301 0

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.


புதுடில்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபம் மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணக்கப்பாடு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, புதுடில்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit 2026 சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா பயணமானார்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அமர்வில் கலந்துகொண்ட அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மனித குல நலனுக்காகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.மேலும், சர்வதேச தொழில்நுட்ப ஆளுமை மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.

உலக நாடுகளின் அரசத் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சுமார் 20 நாடுகளின் தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

Related Post

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; இளைஞன் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 26…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

சிறப்பாக நடைபெற்ற உணவுத் திருவிழா.!

Posted by - February 19, 2026 0
IMHO இன் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (18) PMD கலாச்சார மண்டபத்தில் “உணவுத் திருவிழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசணையான உணவுகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *