கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

212 0

கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.

கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

குழந்தையின் இதயம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனைக்கும், கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன. கண்கள் கண் வங்கிக்கு தானமாக தரப்பட்டன.

மறுவாழ்வு பெற்ற நான்கு பேரின் குடும்பத்தினர் பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார்.

Related Post

கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் தொலைபேசி பயன்படுத்த தடை.!

Posted by - February 23, 2026 0
மொபைல் போன்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதைத் தடுக்கும் நோக்கில், 16 வயதிற்குட்பட்டோர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக மாநில…

நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

Posted by - February 15, 2026 0
நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச்…

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

Posted by - February 19, 2026 0
தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்!

Posted by - February 16, 2026 0
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த…

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி.!

Posted by - February 19, 2026 0
புது டெல்லியில் நடைபெறும் 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இன்று (19) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுக்கான மனித…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *