பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்.!

280 0

மாத்தறை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை ஒருங்கிணைத்து நடக்கும் ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது.


பெப்ரவரி 20 முதல் 23ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் இக்கலை விழா, மாத்தறை பழைய மேல் நீதிமன்ற வளாகம் மற்றும் மாத்தறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. விழாவில் காட்சிக் கலை கண்காட்சிகள், குறும்படத் திரையிடல்கள், கலைச் சந்தை மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் செயன்முறைப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.


ஆரம்ப விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜாபோல்ராஜ் உள்ளிட்ட கலைஞர்கள், விசேட விருந்தினர்கள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Post

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடலம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை.!

Posted by - February 19, 2026 0
மாத்தளை காவல் பிரிவின் கலல்பிட்டி பகுதியில் உள்ள பரகெடி ஓயா எறும்புப் புற்றுக்கு மேலே உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு சிதைந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

Posted by - February 20, 2026 0
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) மதியம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *