விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு.!

348 0

கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து நாட்டவர் என தெரியவந்துள்ளது.

மஹியங்கனை நோக்கி பயணித்த உந்துருளி அதே திசையில் பயணித்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

மருத்துவத்துறையில் எட்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் .!

Posted by - February 19, 2026 0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட…

யாழ். பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா; முகாமைத்துவ பீடத்தில் 7 தங்கப் பதக்கங்களைச் சூடிய மாணவி.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைமறுதினம்…

இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் விடயம்: சுயாதீன சர்வதேச விசாரணை கோரிக்கை – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தல்.!

Posted by - February 21, 2026 0
வடமராட்சி ஊடக இல்லம், ஊடகவியலாளர் சு. இராமச்சந்திரன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது.!

Posted by - February 21, 2026 0
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *