மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

374 0

மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று (21) காலை கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் முன்பாக இருந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.


கடந்த 14ஆம் திகதி கடமைக்குச் சென்ற குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவர் வழிமறிக்கப்பட்டு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்டதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவத்தை கண்டித்தும், தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.காலை 9.30 மணியளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து பஜார் பகுதி வரை பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற குடும்ப நல உத்தியோகத்தர்கள், பின்னர் மாவட்டச் செயலகம் முன் அமைதியான கண்டனத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வேண்டும், பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.


மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் பெண்களின் நகைகளை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதுவரை நான்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் வெளியில் தனியாகச் செல்ல அச்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Post

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

Posted by - February 19, 2026 0
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ்…

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Posted by - February 16, 2026 0
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக…

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 16, 2026 0
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர். இதற்கு…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சட்டவிரோத மதுபானம்!

Posted by - February 19, 2026 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *