ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ.!

162 0

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்புடையதாகத் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு பதிலளித்து உரையாற்றிய சஜித் பிரேமதாஸ,


“எமது கட்சி ஒருபோதும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்கு துணைபோவதோ அல்லது அதனை ஊக்குவிப்பதோ இல்லை. கொலை, கொள்ளை, மோசடி உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோதச் செயல்களையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை; அவற்றை முழுமையாக நிராகரிக்கின்றோம்.


எமது கட்சியைச் சேர்ந்த யாராவது இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக உறுதியான சான்றுகள் இருந்தால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும். நீதியை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது முழு ஆதரவு இருக்கும்,” என சபையில் தெரிவித்தார்.

Related Post

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

Posted by - February 26, 2026 0
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட…

யாழ். பல்கலையில் 40 ஆவது பட்டமளிப்பு விழா: இன்று மூன்றாம் நாள் அமர்வுகள்.!

Posted by - February 21, 2026 0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்த்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (சனிக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெற்றன.கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இவ்விழா, நாளை ஞாயிற்றுக்கிழமை…

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை.!

Posted by - February 20, 2026 0
முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச,…

இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொ*லை – கணவர் தப்பியோட்டம்.!

Posted by - February 21, 2026 0
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்பத் தகராறு காரணமாக…

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Posted by - February 20, 2026 0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *