மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

155 0

ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் அரசு காலதாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


அவர் தெரிவித்ததாவது, புதிய முறைமையா அல்லது பழைய முறைமையா என்பதை ஆராயும் பெயரில் தெரிவுக்குழு அமைப்பது தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும். இதனால் தேர்தல் மேலும் தள்ளிப்போகும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.


மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் விரைந்து நடத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நிலுவையிலுள்ள தேர்தலை முன்னுரிமையுடன் நடத்த வேண்டியதுஅரசின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.சட்டச் சிக்கல்கள் இருப்பின் அவற்றை விரைவாகத் தீர்த்து, தேர்தலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

Related Post

வட்டவளையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பாரவூர்தி – இருவர் படுகாயம்.!

Posted by - February 21, 2026 0
வட்டவளை பகுதியில் 20 அடி பள்ளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

டைனமைட் வெடிபொருட்களுடன் இரு மீனவர்கள் கைது.!

Posted by - February 19, 2026 0
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடைமையில் ‘டைனமைட்’ வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில்…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 16, 2026 0
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *