போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறந்து வைப்பு.!

176 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரிகுளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசம் பகுதியில் உள்ள வேத்துச்சேனை பிரதான வீதி மீண்டும் சேதமடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் வெளியேறிய வெள்ளநீர் காரணமாக வீதி தாழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 06.02.2026 அன்று ஏற்பட்ட மழையிலும் இவ்வீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மேற்பார்வையில் தற்காலிக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வீதி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. எனினும், இன்று காலை மீண்டும் 6 அடி அளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் அதிக நீர்வரத்து ஏற்பட்டது; இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதி மீண்டும்அடித்துச் செல்லப்பட்டது.


வேத்துச்சேனை கிராமத்திற்கு இது ஒரே போக்குவரத்துப் பாதையாக இருப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, வெல்லாவெளி பிரதேச சபை கனரக வாகனங்களின் உதவியுடன் அவசர சீரமைப்பு பணிகளை முன்னெடுத்தது.

இப்பணிகளில் தவிசாளர் வி. மதிமேனன், வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் இணைந்து வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சீரமைத்துள்ளனர்.ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது வீதி சேதமடைவது தொடர்கதையாக இருப்பதால், நிரந்தரத் தீர்வாக பாலம் அல்லது வலுவான கட்டுமானம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

விரைவில் தேர்தல் நடத்தப்படும்; செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தல் களத்தில் தெரியும்.!

Posted by - February 20, 2026 0
மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்.!

Posted by - February 20, 2026 0
துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது…

அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை.!

Posted by - February 20, 2026 0
முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச,…

தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்

Posted by - February 20, 2026 0
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற…

இலங்கையில் பூனைகளிடமிருந்து பரவும் ரேபிஸ் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Posted by - February 19, 2026 0
இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் அதுல லியனபதிரன ரேபிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *