தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

267 0

வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளை அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர்.இதனால் வடமராட்சி கிழக்கில் உள்ள பல உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று (20) உடுத்துறை வேம்படி பகுதியில் எந்த வித அனுமதியும் இன்றி அப்பகுதி மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல் வழங்கப்படாமல் கனரக இயந்திரங்களை கொண்டு மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் குடி நீர் குழாய் அமைப்பதற்கு பாரிய பள்ளம் தோண்டியுள்ளனர்

வெளியில் சென்ற அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பவம் அறிந்து தமது வீட்டை வந்து பார்வையிட்ட போது சுற்று மதில்கள் சேதமடைந்துள்ளதுடன்,வெடிப்பு விழுந்து காணப்படுவதால் சுற்று மதில்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் கோபமடைந்த மக்கள் முன் அறிவிப்பு இன்றி குறித்த வேலையை செய்ததால் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கான நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பரிதாவின் மேற்பார்வையில்தான் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related Post

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - February 21, 2026 0
நாட்டில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

யாழ். பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா; முகாமைத்துவ பீடத்தில் 7 தங்கப் பதக்கங்களைச் சூடிய மாணவி.!

Posted by - February 20, 2026 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைமறுதினம்…

காதல் முரண்பாட்டால் காதலி தூக்கிட்டு உயிர்மாய்ப்பு.!

Posted by - February 21, 2026 0
அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதிக்கும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27…

ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.!

Posted by - February 20, 2026 0
“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல,…

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்.!

Posted by - February 21, 2026 0
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது உத்தியோகபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *