கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

242 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கல்லுண்டாய் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர வேண்டிய துரதிர்ஷ்டநிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நிலம் நிரப்புதல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கலந்துரையாடலின் போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரப்பட்டு, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரப்பும் பணிகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், குடியேற்றப் பகுதிக்கு அண்மையில் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவதும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.

அத்துடன், கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அதன் பராமரிப்புப் பொறுப்பை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு ஒப்படைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து விரைவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.


இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் தொடர்புடைய அரசியல் நிர்வாக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Post

இந்தியப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி.!

Posted by - February 20, 2026 0
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (20) நண்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் சந்தித்தார். AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக…

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

Posted by - February 20, 2026 0
தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன்…

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

இந்தியா – இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

Posted by - February 19, 2026 0
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.…

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

Posted by - February 19, 2026 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *