நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

146 0

நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பிரையர் ஹில் பகுதியில் புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நார்த்தாம்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நார்தாம்ப்டனைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயது சிறுவர்களும், ஆணொருவம், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.அவர்கள் அனைவரும் தற்சமயம் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 20 வயதுடையவர் ஆவார், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நார்தாம்ப்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியங்கள் அல்லது சாட்சியங்கள் இருந்தால் முன்வந்து வழங்குமாறும் பிரதேச வாசிகளை வலியுறுத்தியுள்ளனர்.

Related Post

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

Posted by - February 20, 2026 0
ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்கள் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை…

கிரீன்லாந்து விவகாரம் தீவிரம்: அமெரிக்க கருத்துக்கிடையில் டென்மார்க் மன்னர் பயணம்.!

Posted by - February 20, 2026 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அந்தத் தீவு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் டென்மார்க் மன்னர்…

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

Posted by - February 19, 2026 0
நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Posted by - February 19, 2026 0
அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு செலவுகள் மற்றும் பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை காரணமாக ஊழியர்களின் பணி நேரத்தையும் வேலைகளையும் குறைக்க இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான பெரிய…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை

Posted by - February 16, 2026 0
ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *